ஊர்மிளா, அன்று வந்த கொரியரைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தாள்.
முகமெல்லாம் பூரிப்பு. நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு, விளக்கேற்றி சுவாமியின் முன் வைத்து வணங்கினாள்.
"என்னம்மா ஊர்மிளா, என்ன லெட்டர். ரொம்ப சந்தோஷமா இருக்கே? ஏதாவது பரீட்சையில பாஸ் கீஸ் ஆயிருக்கையா?"
'ஆமாம் என் வாழ்க்கையின் முதல் பரீட்சையில் பாசாகி இருக்கேன்' என்று நினைத்துக் கொண்டாள் ஆனந்தக் கண்ணீருடன்.
"அம்மா! எனக்குக் காலேஜ்ல லெக்சரர் வேலை கெடைச்சிருக்கும்மா..."
"அப்படியா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குமா. சரியான நேரத்துல கடவுள் உனக்குக் கண் திறந்திருக்கிறார்" என்றாள் சரசம்மா.
"மொதல்ல சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போய் அம்மாட்ட...