"சஹானா, சஹானா. யாருடி உனக்கு இந்தப் பேரை ச்சூஸ் பண்ணினது?"
"வேற யாரு. அப்பா, அம்மாதான் நோங்குற கதையாகிப் போச்சே. இல்லத்துக்குக் கொண்டு போன பருவதாம்மா என்னைச் சுத்தப்படுத்தி தொட்டில் போட்டாங்களாம். நான் ரொம்பவும் அழுது ஊரைக் கூட்டிட்டேனாம்."
"இருக்குற குழந்தைகள்ல கொஞ்சம் மூக்கும் முழியுமா திருத்தமா இருந்தேனாம். கொஞ்சம் வெள்ளையுஞ் சொள்ளையுமா வேற இருந்திருக்கேன்."
"ஆயாவுல இருந்து அக்காமாருக வரைக்கும் என்னைய தூக்கி ஏமாத்திப் பார்த்தாங்களாம். நான் திறந்த வாயை மூடுற மாதிரி இல்லையாம். தொண்டையே வறண்டு போயிடுச்சாம். ஜனனி இல்லத்துத் தலைவி ஜானகியம்மா என்னைத் தூக்கி மாரோடு அணைச்சிக்கிட்டாங்களாம்."
"கொஞ்சங்...